Skip to main content

வதந்திகளை பரப்பாதீர்கள்


சமீப காலமாக இ.மெயில், வாட்ஸ்அப், டெலிகிராம், பேஸ்புக், டுவிட்டர் மற்றும் ஊடகங்களில் அதிகமாக வதந்திகள் பரப்பப்படுகிறது.  

இதில் குறிப்பாக மரண செய்திகள், இஸ்லாமியப் பெண்கள் அன்னிய மதத்தவர்களோடு தொடர்ப்பு உள்ளதைப் போன்ற செய்திகள் அதிகமாக உலா வருகின்றன.


இந்த வதந்தியைப் பருப்புவோர், அச்செய்தியைப் போட்டுவிட்டு இதை அதிகமாக ஷேர் செய்யவும் என்ற ஒரு வாசகத்தையும் சேர்த்து போட்டுவிடுவார். 

நம்மவர்களுக்கு அவ்வளவுதான், நன்மையைதானே செய்கிறோம் என்ற பெயரில், அந்த தவகல் உண்மையானதா? அல்லது முஸ்லிம்களை விமர்சிக்கவேண்டும் என்பதற்காக பாசிஸ சக்திகளால் உருவாக்கப்பட்டதா? என்பதைப் பற்றியெல்லாம் கொஞ்சமும் சிந்திப்பதர்க்கு அவகாசம் எடுத்துக்கொள்வதே இல்லை. 

இந்த வதந்திகளை மட்டும் செய்தி உண்மையா? என எவ்வித ஆதாரமும் தேடாமல் ஷேர் செய்வது வியப்பாகத்தான் இருக்கிறது?

Comments

Popular posts from this blog

தகவல் பெறும் உரிமைச் சட்டம் ((Right To Information - RTI)

1.    தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் நோக்கங்கள் 2.    தகவல் உரிமை என்றால் என்ன ? 3.    தகவல் உரிமை எதற்காக ? 4.    என்னென்ன தகவல் கேட்கலாம் ? 5.    தகவல் கொடுக்க வேண்டியவர்கள் ? 6.    என்னென்ன முறையில் தகவல் பெறலாம் 7.    தகவல் கொடுக்க வேண்டிய அதிகாரிகளின் கடமைகள் 8.    தகவலை யாரெல்லாம் கேட்கலாம் ? 9.    யாரிடம் கேட்கலாம் ? 10.   விண்ணப்பம் எழுத யார் உதவ வேண்டும் ? 11.   தமிழிலேயே விண்ணப்பிக்கலாம்! 12.   தபாலில் அனுப்பும் முறை 13.   முகவரிகள் தெரியவில்லையா ? தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் நோக்கங்கள் ·          அரசு அலுவலகங்கள் ஒவ்வொன்றின் செயல்பாட்டிலும் வெளிப்படையான ஒளிவுமறைவற்ற அரசு நிர்வாகத்தைக் கொண்டு வருதல் ·          அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் பணிபுரிபவர்களின் பொறுப்புணர்வை மேம்படுத்தி விரைவாக பணி செய்ய வைத்தல் ·          எந்த ஒ...
 

கொரானா சான்றிதழ் பதிவு செய்யும்போது பாஸ்போர்ட் எண்ணை தவறில்லாமல் பதிவு செய்வது தொடர்பாக மனு கொடுக்கப்பட்டது

 பெறுநர்  வட்டார மருத்துவ அலுவலர் அவர்கள் ராஜசிங்கமங்கலம் பொருள் கொரானா தடுப்பூசி போட்டவர்களுக்கு சான்றிதழில் பாஸ்போர்ட் எண்ணை தவறில்லாமல் பதிவு செய்தல் தொடர்பாக கொரானா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. அந்த சான்றிதழில் அடையாளச் சான்றாக பாஸ்போர்ட் எண்ணை பதிவு செய்யும் பொழுது பாஸ்போர்ட்டில் உள்ள ஆங்கில எழுத்தான முதல் எழுத்தை விட்டு விட்டு மீதமுள்ள எண்களை மட்டும் பதிவு செய்து சர்டிபிகேட் சான்றிதழ் வழங்கப்படுகிறது. வெளிநாடுகளுக்கு செல்லும் பொழுது சான்றிதழில் பாஸ்போர்ட் அடையாள எண் தவறாக இருந்தால் பயணத்தில் சிரமங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தடுப்பூசி போட்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் பொழுது பாஸ்போர்ட்டில் உள்ளவாறு ஆங்கில எழுத்து மற்றும் பாஸ்போர்ட் எண்ணையும் சேர்த்து குறிப்பிட்டு சான்றிதழ் வழங்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறோம்