Skip to main content

Posts

கொரானா சான்றிதழ் பதிவு செய்யும்போது பாஸ்போர்ட் எண்ணை தவறில்லாமல் பதிவு செய்வது தொடர்பாக மனு கொடுக்கப்பட்டது

 பெறுநர்  வட்டார மருத்துவ அலுவலர் அவர்கள் ராஜசிங்கமங்கலம் பொருள் கொரானா தடுப்பூசி போட்டவர்களுக்கு சான்றிதழில் பாஸ்போர்ட் எண்ணை தவறில்லாமல் பதிவு செய்தல் தொடர்பாக கொரானா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. அந்த சான்றிதழில் அடையாளச் சான்றாக பாஸ்போர்ட் எண்ணை பதிவு செய்யும் பொழுது பாஸ்போர்ட்டில் உள்ள ஆங்கில எழுத்தான முதல் எழுத்தை விட்டு விட்டு மீதமுள்ள எண்களை மட்டும் பதிவு செய்து சர்டிபிகேட் சான்றிதழ் வழங்கப்படுகிறது. வெளிநாடுகளுக்கு செல்லும் பொழுது சான்றிதழில் பாஸ்போர்ட் அடையாள எண் தவறாக இருந்தால் பயணத்தில் சிரமங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தடுப்பூசி போட்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் பொழுது பாஸ்போர்ட்டில் உள்ளவாறு ஆங்கில எழுத்து மற்றும் பாஸ்போர்ட் எண்ணையும் சேர்த்து குறிப்பிட்டு சான்றிதழ் வழங்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறோம்
Recent posts

ஆர்.எஸ் மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரானா சிகிச்சை மையம் அமைக்க கோரிக்கை

பெறுநர் உயர்திரு வட்டாட்சியர் அவர்கள் வட்டாட்சியர் அலுவலகம் ஆர்எஸ் மங்கலம்   பொருள்: ஆர்.எஸ் மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரானா சிகிச்சை மையம் அமைத்து தருதல் - சார்பாக ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா மற்றும் சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் கொரானா சிகிச்சைக்காக இராமநாதபுரத்திற்கும் , சிவகங்கைக்கும் மற்றும் மதுரைக்கும் பயணம் செய்கின்றனர். இதனால் பண விரையமும் உயிர் இழப்புகளும் ஏற்படுகிறது. பொதுமக்களின் அலைச்சல் தவிர்க்க மற்றும் அவர்களின் நலம் காக்க ஆர்.எஸ்.மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே கொரானா சிகிச்சை மையம் அமைத்தால் மக்களுக்கு பேருதவியாக அமையும். எனவே ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட பொதுமக்களின் நலன் காக்கும் பொருட்டு கொரானா சிகிச்சை மையம் அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.   ஆா்.எஸ் மங்கலத்தில் கரோனா சிகிச்சை மையம் அமைக்க வலியுறுத்தல் - https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2021/jun/05/insistence-on-setting-up-a-corona-treatment-center-in-the-as-dim-3636310.html

மாண்புமிகு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கும் , மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களுக்கு நன்றிகள் பல

 * மாண்புமிகு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கும்  மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களுக்கு நன்றிகள் பல*  ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அதிகாரியாக பணிபுரிந்த  மருத்துவர் திருமதி சுகந்தி போஸ் அவர்களின் மீது கூறப்பட்ட புகார்களின் மீது உடனடி நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி நன்றி நன்றி... திமுக  அரசு பதவியேற்ற பின் மக்களின் குறைகளை உடனுக்குடன் சரி செய்வதில் மிகுந்த அக்கறை காட்டும் நீங்கள் நீண்ட ஆயுளுடன் மக்கள் பணியாற்ற இறைவனை பிரார்த்திக்கிறோம்.... நன்றி.... நன்றி..... நன்றி

நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி

  மரியாதைக்குரிய ஆர்.எஸ். மங்கலம் தாலுகா  வட்டார மருத்துவ அலுவலர் திருமதி முனீஸ்வரி MBBS அவர்களுக்கும் மற்றும்  வட்டாட்சியர் திரு முருகவேல் அவர்களுக்கும்   நன்றி!!! நன்றி!!! நன்றி!!!   இக் கொரோனா பேரிடர் காலத்தில் ஆர்.எஸ். மங்கலம் மற்றும் சுற்று வட்டார மக்களுக்கு அவசர சிகிச்சை மேற்கொள்வதற்காக எவ்வித தனியார் மருத்துவமனைகளும் செயல்படாத நிலையில் இருந்தது.    எனவே இந்த இக்கட்டான சூழ்நிலையை அறிந்து பொதுமக்கள் , ஜமாத் பிரமுகர்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்களும் தங்களிடம் தனியார் மருத்துவமனைகளை திறக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தார்கள். அக்கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து உடனடி நடவடிக்கை எடுத்து தற்போது ஆர்.எஸ். மங்கலத்தில் 2 தனியார் மருத்துவமனைகள் செயல்படுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்.   இத்தகைய மக்கள் நலன் காக்கும் பணியை நாங்கள் மனதார பாராட்டி தங்களுக்கு  வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.   தாங்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் அனைவரும் கொரானா தொற்றை கட்டுபடுத்துவதற்கு சிறப்பாக களப்பணி ஆற்றுகிறீர்கள்.   மே...

இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்த வட்டார மருத்துவ அலுவலரை மாற்ற நடவடிக்கை எடுத்த அனைவருக்கும் நன்றி

  மரியாதைக்குரிய சட்டமன்ற உறுப்பினர் திரு.கருமாணிக்கம் அவர்களுக்கு,  திமுக நகர செயலாளர்  மற்றும்  அனைத்து திமுக  நிர்வாகிகளுக்கும் ,  நகர் காங்கிரஸ் நிர்வாகிகள்  மற்றும் அனைத்து  சமூக நல ஆர்வலர்களுக்கும் நன்றி!!! நன்றி!!! நன்றி!!!   "தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்"     ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா மற்றும் சுற்றுவட்டார பொதுமக்களின் நலன் காத்திட , நீண்ட நாள் கோரிக்கையினை அனைத்து அரசியல் தலையீடுகளையும் குறுக்கீடுகளையும் தகர்த்தெறிந்து ஆர்.எஸ்.மங்கலம் வட்டார மருத்துவ அலுவலராக  மருத்துவர் திருமதி. முனீஸ்வரி MBBS அவர்களை நியமனம் செய்ய பெரும் முயற்சி எடுத்த   திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் திரு.கருமாணிக்கம் ஆகிய அவர்களுக்கும் ,   ஆர்.எஸ்.மங்கலம் திமுக நகர செயலாளர் மற்றும் அனைத்து திமுக  நிர்வாகிகளுக்கும் ,   நகர் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் அனைத்து சமூக நல ஆர்வலர்களுக்கும் ஆர்.எஸ்.மங்கலம் பொதுமக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்...    நீங...

இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்த வட்டார மருத்துவ அலுவலர் திருமதி சுகந்தி போஸ் மீது கொடுக்கப்பட்ட புகாரும் எடுக்கப்பட்ட நடவடிக்கையும்

  மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களுக்கு ராமநாதபுரம் மாவட்டம் ராஜசிங்கமங்கலம் தாலுகாவாக தரம் உயர்த்தப்பட்டு இரண்டரை வருடங்களுக்கு மேலாக ஆகியும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இன்னும் தரம் உயர்த்த படாமலேயே உள்ளது.  அவசரகால மருத்துவ வசதிகள் கூட இல்லாத ஆரம்ப சுகாதாரநிலையம் ஆக உள்ளது. மேலும் தொடர்ந்து  10  ஆண்டுகளாக ஒரே மருத்துவமனையில் பணிபுரிந்து கொண்டிருக்கும் தலைமை மருத்துவர் திருமதி சுகந்தி போஸ் அவர்கள் சிகிச்சை பெற வரும் மக்களிடம் தரக்குறைவான வார்த்தைகளை பேசி ,  மரியாதை குறைவாக நடந்து கொள்வதால் பொதுமக்கள் பெரும் அவஸ்தைக்கும் ,  மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர். அடிப்படை வசதி மற்றும் மருத்துவர்களின் அலட்சியத்தால் ஆரம்ப சுகாதார நிலையத்திலும் மருத்துவம் பார்க்க முடியாதநிலையில்  35 கிமீ தொலைவில் இருக்கும் இராமநாதபுரத்திற்கு செல்ல வேண்டி உள்ளத்தால் நோயாளிகளுக்கு உடனடி சிகிச்சை அளிக்க காலதாமதம் ஏற்பட்டு அதிக உயிரிழப்பை சந்தித்து இருக்கிறோம். எனவே ஆர்.எஸ்.மங்கலம் ஆரம்ப சுகாரதார நிலையத்தை அனைத்து வதசிகளுடன் தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தி மேலும் கொரானா சி...