Skip to main content

இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்த வட்டார மருத்துவ அலுவலர் திருமதி சுகந்தி போஸ் மீது கொடுக்கப்பட்ட புகாரும் எடுக்கப்பட்ட நடவடிக்கையும்

 மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களுக்கு


ராமநாதபுரம் மாவட்டம் ராஜசிங்கமங்கலம் தாலுகாவாக தரம் உயர்த்தப்பட்டு இரண்டரை வருடங்களுக்கு மேலாக ஆகியும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இன்னும் தரம் உயர்த்த படாமலேயே உள்ளது. அவசரகால மருத்துவ வசதிகள் கூட இல்லாத ஆரம்ப சுகாதாரநிலையம் ஆக உள்ளது.

மேலும் தொடர்ந்து 10 ஆண்டுகளாக ஒரே மருத்துவமனையில் பணிபுரிந்து கொண்டிருக்கும் தலைமை மருத்துவர் திருமதி சுகந்தி போஸ் அவர்கள் சிகிச்சை பெற வரும் மக்களிடம் தரக்குறைவான வார்த்தைகளை பேசிமரியாதை குறைவாக நடந்து கொள்வதால் பொதுமக்கள் பெரும் அவஸ்தைக்கும்மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர்.

அடிப்படை வசதி மற்றும் மருத்துவர்களின் அலட்சியத்தால் ஆரம்ப சுகாதார நிலையத்திலும் மருத்துவம் பார்க்க முடியாதநிலையில் 35கிமீ தொலைவில் இருக்கும் இராமநாதபுரத்திற்கு செல்ல வேண்டி உள்ளத்தால் நோயாளிகளுக்கு உடனடி சிகிச்சை அளிக்க காலதாமதம் ஏற்பட்டு அதிக உயிரிழப்பை சந்தித்து இருக்கிறோம்.

எனவே ஆர்.எஸ்.மங்கலம் ஆரம்ப சுகாரதார நிலையத்தை அனைத்து வதசிகளுடன் தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தி மேலும் கொரானா சிகிச்சை மையமாக மாற்றி சிகிச்சை அளிக்க போர்க்கால அடிப்படையில் வழிவகை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தமிழக முதல்வராக முக.ஸ்டாலின் அவர்கள் கொரோனா எனும் பெரும் தொற்றை ஒழிப்பதற்காக பல முயற்சிகள் எடுத்து வரும் நிலையில்இதுபோன்ற அரசு மருத்துவர்களின் செயல்கள் இந்த அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
எனவே ஆர்.எஸ்.மங்கலம் தலைமை மருத்துவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுத்துகுறைந்தபட்சம் இடமாற்றம் செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.












Comments

Popular posts from this blog

தகவல் பெறும் உரிமைச் சட்டம் ((Right To Information - RTI)

1.    தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் நோக்கங்கள் 2.    தகவல் உரிமை என்றால் என்ன ? 3.    தகவல் உரிமை எதற்காக ? 4.    என்னென்ன தகவல் கேட்கலாம் ? 5.    தகவல் கொடுக்க வேண்டியவர்கள் ? 6.    என்னென்ன முறையில் தகவல் பெறலாம் 7.    தகவல் கொடுக்க வேண்டிய அதிகாரிகளின் கடமைகள் 8.    தகவலை யாரெல்லாம் கேட்கலாம் ? 9.    யாரிடம் கேட்கலாம் ? 10.   விண்ணப்பம் எழுத யார் உதவ வேண்டும் ? 11.   தமிழிலேயே விண்ணப்பிக்கலாம்! 12.   தபாலில் அனுப்பும் முறை 13.   முகவரிகள் தெரியவில்லையா ? தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் நோக்கங்கள் ·          அரசு அலுவலகங்கள் ஒவ்வொன்றின் செயல்பாட்டிலும் வெளிப்படையான ஒளிவுமறைவற்ற அரசு நிர்வாகத்தைக் கொண்டு வருதல் ·          அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் பணிபுரிபவர்களின் பொறுப்புணர்வை மேம்படுத்தி விரைவாக பணி செய்ய வைத்தல் ·          எந்த ஒ...
 

கொரானா சான்றிதழ் பதிவு செய்யும்போது பாஸ்போர்ட் எண்ணை தவறில்லாமல் பதிவு செய்வது தொடர்பாக மனு கொடுக்கப்பட்டது

 பெறுநர்  வட்டார மருத்துவ அலுவலர் அவர்கள் ராஜசிங்கமங்கலம் பொருள் கொரானா தடுப்பூசி போட்டவர்களுக்கு சான்றிதழில் பாஸ்போர்ட் எண்ணை தவறில்லாமல் பதிவு செய்தல் தொடர்பாக கொரானா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. அந்த சான்றிதழில் அடையாளச் சான்றாக பாஸ்போர்ட் எண்ணை பதிவு செய்யும் பொழுது பாஸ்போர்ட்டில் உள்ள ஆங்கில எழுத்தான முதல் எழுத்தை விட்டு விட்டு மீதமுள்ள எண்களை மட்டும் பதிவு செய்து சர்டிபிகேட் சான்றிதழ் வழங்கப்படுகிறது. வெளிநாடுகளுக்கு செல்லும் பொழுது சான்றிதழில் பாஸ்போர்ட் அடையாள எண் தவறாக இருந்தால் பயணத்தில் சிரமங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தடுப்பூசி போட்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் பொழுது பாஸ்போர்ட்டில் உள்ளவாறு ஆங்கில எழுத்து மற்றும் பாஸ்போர்ட் எண்ணையும் சேர்த்து குறிப்பிட்டு சான்றிதழ் வழங்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறோம்