Skip to main content

Posts

Showing posts from June, 2020

புகார்களை வாட்ஸ் அப் மூலம் அனுப்பலாம்

மற்றவர்களுக்கும் பகிரலாமே.......

மின்சாரம் சம்பந்தமான புகார்களை வாட்ஸ் அப் மூலம் அனுப்பலாம்

  உங்கள் பகுதியில் உள்ள மின்சாரம் சம்பந்தமான புகார்களை வாட்ஸ் மூலமாக  தெரிவிக்கலாம் விளக்கம் நாம் வசிக்கும் பகுதிகளில் மின்சார கம்பங்கள் , கம்பிகள் , மின் இனைப்பில்லை என்பது தொடர்பான புகார்களை தெரிவிக்க அப்பகுதியில் இருக்கும்   மின்சார வாரிய அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு பேசுவோம். இனி , மின்சாரம் சம்பந்தமான புகார்களை வாட்ஸ் அப் மூலமும் பதிவு செய்யலாம் 2017 - ம் ஆண்டு நவம்பர் மாதம் Tamil Nadu Generation and Distribution Corporation (Tangedco) , வாடிக்கையாளர்கள் தங்களின் புகார்களை தெரிவிக்க வாட்ஸ் அப் எண்களை அறிவித்தது. ” பொதுமக்கள் தங்கள் குறைகளை அனுப்பும் போது அவர்களின் இருப்பிடத்தையும் குறிப்பிட வேண்டும் , இது எங்கள் அதிகாரிகளுக்கு பிரச்சனையை தீர்க்க எளிதாக இருக்கும் ” என Tangedco- வின் கண்காணிப்பு பொறியாளர் ஆர்.பத்மநாபன் செய்திகளில் கூறியுள்ளார். ·          சிதைவடைந்த நிலையில் இருக்கும் மின் கம்பங்கள் , ·          திறந்து இருக்கும்   ஜங்சன் பாக்ஸ்கள் , ·   ...

தமிழகத்தில் முதன்முறையாக ஜமாபந்தி மனுக்கள் இணையதளத்தின் மூலம்

தமிழகத்தில் முதன்முறையாக ஜமாபந்தி மனுக்கள் இணையதளத்தின் மூலம் அரசு இசேவை மையங்கள் வழியாக மனுக்கள் பதிவேற்றம் செய்யலாம். மனுக்கள் பதிவேற்றம் செய்யும் வழிமுறைகள் காணொளியில்.. https://youtu.be/UZBp1YMwxmI பொது இ சேவை மையத்தில் ஜமாபந்தி மனு அளிக்கலாம்.. ஜமாபந்தியில் எதற்க்காக மனு அளிக்கலாம்? பட்டா, சிட்டா, அடங்கல் குறித்தான விவரங்கள் கேட்டு மனுக்கள் தரலாம். குடிநீர் வசதி, சாலை வசதி, மயான வசதி, கழிவு நீர் சாக்கடை வசதி முதலிய தேவைகள் குறித்தும் வருவாய்த்துறை அலுவலர்களிடம் முறையிடலாம். இலவச மனை பட்டா வேண்டி விண்ணப்பிக்கலாம். வீட்டு மனை உடையவர்கள் வீடு கட்ட அரசு கடன் மற்றும் மானியம் கோரி விண்ணப்பிக்கலாம். குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் ஆதரவற்ற விதவைகள் மற்றும் முதியோர் ஒய்வூதியம், என்று உங்கள் கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம் இந்த வருவாய் தீர்வாயத்தில் பொதுமக்களின் நியாயமான கோரிக்கை மனுக்கள் உடனடியாக வருவாய்த்துறையினரால் நிறைவேற்றப்படும். இந்த ஆண்டு ஜமாபந்தி ஆன்லைன் மூலம் ஏன்? கொரோனாவால் ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் மக்கள் கூட்டமாக கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.அவர்களிடம் நேரிடையாக மனுக்...

தகவல் பெறும் உரிமைச் சட்டம் ((Right To Information - RTI)

1.    தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் நோக்கங்கள் 2.    தகவல் உரிமை என்றால் என்ன ? 3.    தகவல் உரிமை எதற்காக ? 4.    என்னென்ன தகவல் கேட்கலாம் ? 5.    தகவல் கொடுக்க வேண்டியவர்கள் ? 6.    என்னென்ன முறையில் தகவல் பெறலாம் 7.    தகவல் கொடுக்க வேண்டிய அதிகாரிகளின் கடமைகள் 8.    தகவலை யாரெல்லாம் கேட்கலாம் ? 9.    யாரிடம் கேட்கலாம் ? 10.   விண்ணப்பம் எழுத யார் உதவ வேண்டும் ? 11.   தமிழிலேயே விண்ணப்பிக்கலாம்! 12.   தபாலில் அனுப்பும் முறை 13.   முகவரிகள் தெரியவில்லையா ? தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் நோக்கங்கள் ·          அரசு அலுவலகங்கள் ஒவ்வொன்றின் செயல்பாட்டிலும் வெளிப்படையான ஒளிவுமறைவற்ற அரசு நிர்வாகத்தைக் கொண்டு வருதல் ·          அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் பணிபுரிபவர்களின் பொறுப்புணர்வை மேம்படுத்தி விரைவாக பணி செய்ய வைத்தல் ·          எந்த ஒ...