Skip to main content

மின்சாரம் சம்பந்தமான புகார்களை வாட்ஸ் அப் மூலம் அனுப்பலாம்


 உங்கள் பகுதியில் உள்ள மின்சாரம் சம்பந்தமான புகார்களை வாட்ஸ் மூலமாக  தெரிவிக்கலாம்

விளக்கம்

நாம் வசிக்கும் பகுதிகளில் மின்சார கம்பங்கள், கம்பிகள், மின் இனைப்பில்லை என்பது தொடர்பான புகார்களை தெரிவிக்க அப்பகுதியில் இருக்கும் மின்சார வாரிய அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு பேசுவோம். இனி , மின்சாரம் சம்பந்தமான புகார்களை வாட்ஸ் அப் மூலமும் பதிவு செய்யலாம்

2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் Tamil Nadu Generation and Distribution Corporation (Tangedco) , வாடிக்கையாளர்கள் தங்களின் புகார்களை தெரிவிக்க வாட்ஸ் அப் எண்களை அறிவித்தது.

பொதுமக்கள் தங்கள் குறைகளை அனுப்பும் போது அவர்களின் இருப்பிடத்தையும் குறிப்பிட வேண்டும், இது எங்கள் அதிகாரிகளுக்கு பிரச்சனையை தீர்க்க எளிதாக இருக்கும் என Tangedco-வின் கண்காணிப்பு பொறியாளர் ஆர்.பத்மநாபன் செய்திகளில் கூறியுள்ளார்.

·         சிதைவடைந்த நிலையில் இருக்கும் மின் கம்பங்கள்,

·         திறந்து இருக்கும் ஜங்சன் பாக்ஸ்கள் ,

·         கீழே தொங்கும் மின்சார கம்பிகள்

உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து புகைப்படங்கள் அல்லது விவரங்களை வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பி வைக்கலாம்.

ஒவ்வொரு மண்டலங்களுக்கும் தனித்தனியாக வாட்ஸ் அப் எண்கள் அளிக்கப்பட்டு உள்ளன.

விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களின் புகார்களுக்கு வாட்ஸ் அப் எண் – 9445855768. 

 

சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களின் புகார்களுக்கு வாட்ஸ் அப் எண் – 9445851912. 

 

சென்னை மாவட்டம் முழுவதும் மின்சாரம் சம்பந்தமான புகார்களுக்கு வாட்ஸ் அப் எண் – 9445850829.

 

கோயம்புத்தூர் , திருப்பூர் , நீலகிரி மாவட்டங்களின் புகார்களுக்கு

வாட்ஸ் அப் எண் – 9442111912. 

 

திருநெல்வேலி , தூத்துக்குடி , கன்னியாகுமரி மாவட்டங்களின் புகார்களுக்கு

வாட்ஸ் அப் எண் –  8903331912.

 

 

மதுரை , திண்டுக்கல் , தேனி, ராமநாதபுரம் , சிவகங்கை மாவட்டங்களின் புகார்களுக்கு

வாட்ஸ் அப் எண் – 9443111912.

 

 

திருச்சி , தஞ்சாவூர் , பெரம்பலூர், அரியலூர் , புதுக்கோட்டை , திருவாரூர் , நாகப்பட்டினம் , கரூர் மாவட்டங்களின் புகார்களுக்கு

வாட்ஸ் அப் எண் – 9486111912. 



தமிழக மின்சார வாரியத்தின் ஒவ்வொரு மண்டலத்திற்கும் புகார்களை அளிக்க வாட்ஸ் எண்களை அளித்து இருப்பது பொதுமக்களுக்கு பயன்படக்கூடியதாக இருக்கும் என கூறப்படுகிறது. எனினும், பொது இடங்களில் நீங்கள் காணும் மின்சார பிரச்சனைகள் குறித்து புகார் அளிப்பது மின்சார வாரியத்தின் பார்வைக்கு செல்லும்.

இதைத் தவிர, உங்கள் பகுதியில் ஏதேனும் மின்சார பிரச்சனைகள் இருந்து மின் வாரியத்திற்கு புகார் தெரிவிக்க விரும்பினால் 1912என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசலாம். இல்லையேல், உங்கள் பகுதியில் இருக்கும் மின்வாரியத்தின் அலுவலக எண்ணிற்கும் நேரடியாக தொடர்பு கொள்ளலாம். இவையும் முடியாத பட்சத்தில், வாட்ஸ் அப் எண் மூலம் புகார் அளிப்பது பயனளிக்கலாம்.

 

மாதிரி புகார் கடிதம்

புகார்களை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் அனுப்பலாம்

Date : 28.6.2020

Address

J.Mohamed Ibrahim

S/o Mohamed jabarullahkhan

14/27 Aligar salai

R.s.Mangalam

Ramanathapuram(DIST)

PIN-623525

PH-944XXXXX76

 

Subject - complaining of a frequent power cut.

 

Dear sir,

This is a matter of great concern that our locality is severely getting affected by frequent power cuts in the recent month. Because of all this, very tragic effects can be noticed on the health, mental stability and study habits in our children. Every family member in the family is facing problem. Aged are unable to get the rest and relaxation they require. It is difficult to bath without geyser in such a  cold weather. Kitchen work and other chores of our mothers are getting disrupted as well. The conditions are undescribable. I thank you in anticipation and expect the condition to improve soon in near future. So i would like you to write an article in one of your esteemed columns regarding this topic.Through the columns of your esteemed daily, i want to draw the attention of the respective authorities to the frequent breakdown of electricity in my area.

Thankyou.


Comments

Post a Comment

Popular posts from this blog

தகவல் பெறும் உரிமைச் சட்டம் ((Right To Information - RTI)

1.    தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் நோக்கங்கள் 2.    தகவல் உரிமை என்றால் என்ன ? 3.    தகவல் உரிமை எதற்காக ? 4.    என்னென்ன தகவல் கேட்கலாம் ? 5.    தகவல் கொடுக்க வேண்டியவர்கள் ? 6.    என்னென்ன முறையில் தகவல் பெறலாம் 7.    தகவல் கொடுக்க வேண்டிய அதிகாரிகளின் கடமைகள் 8.    தகவலை யாரெல்லாம் கேட்கலாம் ? 9.    யாரிடம் கேட்கலாம் ? 10.   விண்ணப்பம் எழுத யார் உதவ வேண்டும் ? 11.   தமிழிலேயே விண்ணப்பிக்கலாம்! 12.   தபாலில் அனுப்பும் முறை 13.   முகவரிகள் தெரியவில்லையா ? தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் நோக்கங்கள் ·          அரசு அலுவலகங்கள் ஒவ்வொன்றின் செயல்பாட்டிலும் வெளிப்படையான ஒளிவுமறைவற்ற அரசு நிர்வாகத்தைக் கொண்டு வருதல் ·          அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் பணிபுரிபவர்களின் பொறுப்புணர்வை மேம்படுத்தி விரைவாக பணி செய்ய வைத்தல் ·          எந்த ஒ...

பாலியல் குற்றங்கள் இல்லாத மாவட்டமாக மாற்ற

மாண்புமிகு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கும் , மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களுக்கு நன்றிகள் பல

 * மாண்புமிகு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கும்  மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களுக்கு நன்றிகள் பல*  ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அதிகாரியாக பணிபுரிந்த  மருத்துவர் திருமதி சுகந்தி போஸ் அவர்களின் மீது கூறப்பட்ட புகார்களின் மீது உடனடி நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி நன்றி நன்றி... திமுக  அரசு பதவியேற்ற பின் மக்களின் குறைகளை உடனுக்குடன் சரி செய்வதில் மிகுந்த அக்கறை காட்டும் நீங்கள் நீண்ட ஆயுளுடன் மக்கள் பணியாற்ற இறைவனை பிரார்த்திக்கிறோம்.... நன்றி.... நன்றி..... நன்றி