கொரானா சான்றிதழ் பதிவு செய்யும்போது பாஸ்போர்ட் எண்ணை தவறில்லாமல் பதிவு செய்வது தொடர்பாக மனு கொடுக்கப்பட்டது
பெறுநர் வட்டார மருத்துவ அலுவலர் அவர்கள் ராஜசிங்கமங்கலம் பொருள் கொரானா தடுப்பூசி போட்டவர்களுக்கு சான்றிதழில் பாஸ்போர்ட் எண்ணை தவறில்லாமல் பதிவு செய்தல் தொடர்பாக கொரானா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. அந்த சான்றிதழில் அடையாளச் சான்றாக பாஸ்போர்ட் எண்ணை பதிவு செய்யும் பொழுது பாஸ்போர்ட்டில் உள்ள ஆங்கில எழுத்தான முதல் எழுத்தை விட்டு விட்டு மீதமுள்ள எண்களை மட்டும் பதிவு செய்து சர்டிபிகேட் சான்றிதழ் வழங்கப்படுகிறது. வெளிநாடுகளுக்கு செல்லும் பொழுது சான்றிதழில் பாஸ்போர்ட் அடையாள எண் தவறாக இருந்தால் பயணத்தில் சிரமங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தடுப்பூசி போட்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் பொழுது பாஸ்போர்ட்டில் உள்ளவாறு ஆங்கில எழுத்து மற்றும் பாஸ்போர்ட் எண்ணையும் சேர்த்து குறிப்பிட்டு சான்றிதழ் வழங்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறோம்