Skip to main content

நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி

 மரியாதைக்குரிய ஆர்.எஸ். மங்கலம் தாலுகா வட்டார மருத்துவ அலுவலர் திருமதி முனீஸ்வரி MBBS அவர்களுக்கும் மற்றும் வட்டாட்சியர் திரு முருகவேல் அவர்களுக்கும்

 

நன்றி!!! நன்றி!!! நன்றி!!!

 

இக் கொரோனா பேரிடர் காலத்தில் ஆர்.எஸ். மங்கலம் மற்றும் சுற்று வட்டார மக்களுக்கு அவசர சிகிச்சை மேற்கொள்வதற்காக எவ்வித தனியார் மருத்துவமனைகளும் செயல்படாத நிலையில் இருந்தது.

 

 எனவே இந்த இக்கட்டான சூழ்நிலையை அறிந்து பொதுமக்கள், ஜமாத் பிரமுகர்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்களும் தங்களிடம் தனியார் மருத்துவமனைகளை திறக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தார்கள். அக்கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து உடனடி நடவடிக்கை எடுத்து தற்போது ஆர்.எஸ். மங்கலத்தில் 2 தனியார் மருத்துவமனைகள் செயல்படுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்.

 

இத்தகைய மக்கள் நலன் காக்கும் பணியை நாங்கள் மனதார பாராட்டி தங்களுக்கு  வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

 

தாங்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் அனைவரும் கொரானா தொற்றை கட்டுபடுத்துவதற்கு சிறப்பாக களப்பணி ஆற்றுகிறீர்கள்.

 

மேலும் நீங்கள் நீண்ட ஆயுளுடனும் மேலும் பல மக்கள் நலப்பணிகள் ஆற்ற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்..

Comments

Popular posts from this blog

தகவல் பெறும் உரிமைச் சட்டம் ((Right To Information - RTI)

1.    தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் நோக்கங்கள் 2.    தகவல் உரிமை என்றால் என்ன ? 3.    தகவல் உரிமை எதற்காக ? 4.    என்னென்ன தகவல் கேட்கலாம் ? 5.    தகவல் கொடுக்க வேண்டியவர்கள் ? 6.    என்னென்ன முறையில் தகவல் பெறலாம் 7.    தகவல் கொடுக்க வேண்டிய அதிகாரிகளின் கடமைகள் 8.    தகவலை யாரெல்லாம் கேட்கலாம் ? 9.    யாரிடம் கேட்கலாம் ? 10.   விண்ணப்பம் எழுத யார் உதவ வேண்டும் ? 11.   தமிழிலேயே விண்ணப்பிக்கலாம்! 12.   தபாலில் அனுப்பும் முறை 13.   முகவரிகள் தெரியவில்லையா ? தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் நோக்கங்கள் ·          அரசு அலுவலகங்கள் ஒவ்வொன்றின் செயல்பாட்டிலும் வெளிப்படையான ஒளிவுமறைவற்ற அரசு நிர்வாகத்தைக் கொண்டு வருதல் ·          அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் பணிபுரிபவர்களின் பொறுப்புணர்வை மேம்படுத்தி விரைவாக பணி செய்ய வைத்தல் ·          எந்த ஒ...
 

கொரானா சான்றிதழ் பதிவு செய்யும்போது பாஸ்போர்ட் எண்ணை தவறில்லாமல் பதிவு செய்வது தொடர்பாக மனு கொடுக்கப்பட்டது

 பெறுநர்  வட்டார மருத்துவ அலுவலர் அவர்கள் ராஜசிங்கமங்கலம் பொருள் கொரானா தடுப்பூசி போட்டவர்களுக்கு சான்றிதழில் பாஸ்போர்ட் எண்ணை தவறில்லாமல் பதிவு செய்தல் தொடர்பாக கொரானா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. அந்த சான்றிதழில் அடையாளச் சான்றாக பாஸ்போர்ட் எண்ணை பதிவு செய்யும் பொழுது பாஸ்போர்ட்டில் உள்ள ஆங்கில எழுத்தான முதல் எழுத்தை விட்டு விட்டு மீதமுள்ள எண்களை மட்டும் பதிவு செய்து சர்டிபிகேட் சான்றிதழ் வழங்கப்படுகிறது. வெளிநாடுகளுக்கு செல்லும் பொழுது சான்றிதழில் பாஸ்போர்ட் அடையாள எண் தவறாக இருந்தால் பயணத்தில் சிரமங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தடுப்பூசி போட்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் பொழுது பாஸ்போர்ட்டில் உள்ளவாறு ஆங்கில எழுத்து மற்றும் பாஸ்போர்ட் எண்ணையும் சேர்த்து குறிப்பிட்டு சான்றிதழ் வழங்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறோம்