Skip to main content

Posts

Showing posts from July, 2020

தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற ரூபாய் 10,000 மானியம்

தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற ரூபாய் 10,000 மானியம்

மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண நிதி

தமிழக அரசின் ஆணைப்படி, தேசிய அடையாள அட்டை வைத்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.  இராமநாதபுரம் மாவட்டத்தில் தேசிய அடையாள அட்டை அசல் வைத்துள்ள நபர்களுக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டு  வருகிறது. பணம் வழங்கும் பட்டியலில் பெயர் இருந்தும், ஆனால் அடையாள அட்டை அசல் இல்லாத நபர்கள் இந்த நிவாரண தொகையை பெற முடியாத நிலை இருப்பதால்,  அவர்களுக்கு கீழ்கண்ட நாட்களில் அந்தந்த தாலுகா அலுவலகங்களில், மருத்துவர் மூலம் மருத்துவ சான்றிதழ் வழங்கி அதனடிப்படையில் அன்றைய தினமே நிவாரண தொகை வழங்க மாவட்ட ஆட்சியர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  எனவே தங்கள் பகுதிக்கு உட்பட்ட தாலுகா அலுவலகங்களில், குறிப்பிட்ட தினத்தன்று தகுந்த முன்னேற்பாடுகளை செய்யும்படி இராமநாதபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் அவர்களால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.  27.07.2020 ( திங்கள்) - இராமேஸ்வரம்,    28.07.2020 (செவ்வாய்)- கீழக்கரை ,   29.07.2020 ( புதன்) - கமுதி,  30.07.2020 ( வியாழன்) - கடலாடி,  31.07.2020 (வெள்ளி) - ஆர்.எஸ்.மங்களம்,...

அலிகார் சாலை, என் என் பார்க் தெரு பாலம் பழுதுபார்க்கப்பட்டது..... அல்ஹம்துலில்லாஹ்

அலிகார் சாலை, என் என் பார்க் தெரு பாலம் பழுதுபார்க்கப்பட்டது..... அல்ஹம்துலில்லாஹ்

+2 முடித்து பொருளாதாரத்தில் பின்தங்கியவரா?

+2 முடித்து பொருளாதாரத்தில் பின்தங்கியவரா?

இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி அவர்களின் உயர் கல்வி உதவித் திட்டம் - 2020

இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி அவர்களின் உயர் கல்வி உதவித் திட்டம் - 2020 விண்ணப்பிக்க https://forms.gle/uEmRLXVp4DuYk1iF9 1. இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 600 மாணவர்களுக்கு உயர்கல்வி உதவி கே. நவாஸ்கனி எம்.பி அவர்களால் வழங்கப்படுகிறது. 2. விண்ணப்பங்கள்யாவும் வரும் ஆகஸ்ட் 15- 2020 (15/08/2020) க்குள் பதிவு செய்யப்பட வேண்டும். 3. விதிமுறைகள் படிவத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மனிதநேயம் கொண்ட நவாஸ்கனி எம்.பி அவர்களின் இந்த அறிவிப்பை இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

பத்திர பதிவில் சூப்பர் மாற்றம்.. ஆக. 1ம் தேதி முதல் பத்திரபதிவு செய்தவுடன் பட்டா மாறும்!

சென்னை: தமிழகத்தில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் பத்திரபதிவு செய்தவுடன் தானாகவே பட்டா மாறுதல் ஆகும் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது என உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் வீடு, மனை, நிலங்களை வாங்கினால் சார்பதிவாளர் அலுவலகங்களில் அவை பத்திரப்பதிவு செய்யப்படுகிறது. அதன் பின்னர் பட்டாவை தன் பெயரில் மாற்றுவதற்கு வாங்கியவர் விண்ணப்பிக்க வேண்டும். அந்த சொத்தில் முழு உரிமை உள்ளவரா, அந்த சொத்துக்களில் வில்லங்கம் இருக்கிறதா என்பதை அறிந்த பின்னர் தாசில்தார பட்டா வழங்குவார். இதுவே இப்போது உள்ள நடைமுறை. இந்த நடைமுறையால் பட்டாவிற்கு விண்ணப்பம் செய்வோர் நிறைய அலைச்சல்களை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. இதை தவிர்க்க சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்வதன் மூலம் தானாக பட்டா மாறுதல் ஆகும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. சோதனை அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜபாத் தாலுகாவில் கடந்த 17ம் தேதி நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்நிலையில். ஆகஸ்ட் 1ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு செய்த உடன் தானாக பட்டாமாறுதல் திட்டம் நடைமுறைக்கு வருகிறது. இது குறித்து பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறு...

கலை, அறிவியல், மேலாண்மை மற்றும் கணக்கியல் படிக்க விரும்பும் மாணவர்களுக்கான பதிவு இது.

தென்னகத்தின் அலிகார் என்று போற்றப்படும், தேசிய அளவில் 54-வது (NIRF Ranking) இடத்தை பெற்றிருக்கும், 70 வருட பாரம்பரியமிக்க நமது திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் உங்களது மேற்படிப்பை தொடர விரும்பினால் உடனே  https://jmc.edu/admission2k20.php என்ற லிங்கின் மூலம் உங்களது அப்ளிகேஷனை பூர்த்தி செய்து கொள்ளவும். ஆன்லைன் மூலமாக மட்டுமே சேர்க்கை நடைபெறும். இமாம், பள்ளியில் வேலை செய்பவர்கள், ஆதரவற்றவர்கள், பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியவர்கள், 100% ஜகாத் பெற தகுதியானவர்கள் லின்  குழந்தைகள் யாரேனும் இருந்தால் எங்களுக்கு தெரியப்படுத்தவும் (இன்றிலிருந்து பத்து  நாட்களுக்குள் மட்டும்)  இன்ஷா அல்லாஹ் அவர்களின் மதிப்பெண், விரும்பும் பாடம் மற்றும் தகுதியின் அடிப்படையில் கல்லூரியில் இடமும், கல்வி உதவித்தொகையும் செய்ய இசைந்து உள்ளோம்.  இறைவனின் பொருத்தத்தை நாடி... வரு. ஜலாலுதீன், பொது செயலாளர், JMC முன்னாள் மாணவர்கள் சங்கம், குவைத் பிரிவு. +(965) 9717 9818

ஜமால் முஹம்மது கல்லூரியில் ஐந்தாண்டு காலத்தில் இரண்டு பட்டப்படிப்புகள் முற்றிலும் இலவசம்!

திருச்சி ஜமால் முகமது கல்லூரி யில் இவ்வாண்டு கல்வி பயில இருக்கும் மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு! பி ஏ அரபிக், எம்.ஏ அரபிக் படிக்க ஆர்வம் உள்ள மாணவர்கள் இந்தத் துறைகள் விண்ணப்பிக்கலாம்! 2 டிகிரி களுடன் மதிய நேரத்தில் கூடுதலாக ஆலிம் படிப்பும் ஐந்து ஆண்டுகளின் முடிவில் 2 டிகிரி களோடு சனதும் வழங்கப்படுகிறது. இந்தப் பிரிவில் இணையும் மாணவர்களுக்குக் கல்விக் கட்டணம் முற்றிலும் இலவசம் அதேபோல் விடுதிக் கட்டணம் சுமார் வருடத்திற்கு 26 ஆயிரம் ரூபாய் இலவசம்! அதேபோல் விடுதி உணவு கட்டணம் தோராயமாக ஆண்டுக்கு சுமார் 20000 ரூபாய் இலவசம்! மிகச்சிறந்த நவீன வசதிகளுடன்கூடிய விடுதி அறை மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது... மார்க்கப்பற்றுள்ள ஒழுக்கம் உள்ள மாணவர்கள் இத்துறையில் இணையலாம்! இக்கல்லூரியின் இருபெரும் வள்ளல்களாம் ஜமால் முஹம்மது சாகிப்  காஜா மியான் ராவுத்தர்  கண்ட கனவு இது! அரபிக் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு வெளிநாடுகள் மிகச்சிறந்த வாய்ப்புகள் படிக்கும்போது ஏற்படுகிறது.. வாய்ப்புள்ளவர்கள் பயன்படுத்தி கொள்க!

ஆர் எஸ் மங்கலம் பேருராட்சி அலுவலகத்தில் அளிக்கப்பட்ட மராமத்து கோரிக்கை மனு - நாள் : 08 JULY 2020

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ 👉 நமது ஊரில் ரோடு மட்டும் பாலங்கள் சேதமடைந்தது சம்பந்தமாக விளக்கப்படத்துடன் மனு தயாரித்து இன்று செயல் அலுவலரிடம் கொடுக்கப்பட்டது. 👉 அதற்கு அவர்கள் அனைத்து ரோடுகளுக்கும் நாங்கள் எழுதி அனுப்பி இருக்கிறோம். மூன்று மாத காலத்திற்குள் ஒவ்வொன்றாக சரி செய்து தரப்படும் என்று கூறியிருக்கிறார்கள். 👉 நாங்கள் அதிகம் பாதிப்பு அடைந்துள்ள N.Nபார்க் செல்லும் வழி உள்ள பாலம் மற்றும் பிரிட்டோ ஸ்கூல் அருகில் உள்ள தடுப்பு சுவரை முதலில் சரி செய்து தாருங்கள் என்று கூறினோம். 👉 அதற்கு அவர்களும் ஒரு வார காலத்திற்குள் முதலில் நாம் குறிப்பிட்ட அந்த இரண்டு இடங்களையும் சரி செய்து கொடுத்துவிட்டு பின்பு ஒவ்வொன்றாக சரி செய்து தருகிறோம் என்று உறுதி அளித்திருக்கிறார்கள்.  👉இன்ஷா அல்லாஹ் நம்முடைய முயற்சிகள் சிரமமின்றி லேசாக நிறைவேறுவதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் உதவி செய்வானாக ஆமீன்....

மின்சார குறைபாடுகளை சரிசெய்ய கொடுக்கப்பட்ட கோரிக்கை மனு - நாள் - 02 ஜூலை 2020 (இடம் -ஆர் எஸ் மங்கலம்)

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ 👉 மின்வாரிய துறை சம்பந்தமான புகார் கடிதம் நமது ஊர் உதவி பொறியாளர் இடம் கொடுக்கப்பட்டது. 👉நாம் கொடுத்த மூன்று கோரிக்கைகளில் மூன்றாவது கோரிக்கையான  B & C பகுதிகளில் ரீடிங்  எடுப்பதற்கு ஏற்கனவே பணியாளர் நியமித்து விட்டோம் என்று கூறிவிட்டார்கள். 👉முதல் கோரிக்கையான இரவு நேர பணியாளர் நியமனம் செய்வது சம்பந்தமாக அடுத்த வாரத்திலிருந்து தினமும் ஒரு நபரை நான் இரவு தங்க வைக்கிறேன் என்று உறுதி கூறி இருக்கிறார்கள். 👉 இரண்டாவது கோரிக்கையான பகல்நேர மின்தடையை சரி செய்வதற்கு மூன்று தொலைபேசி எண்கள் கொடுத்திருக்கிறார்கள் இந்த தொலைபேசி எண்கள் இன்னும் சிறிது நேரத்தில் நமது தளத்தில் இமேஜ் பார்மட்டில் பதிவிடப்படும்.  👉நம் கோரிக்கை அனைத்தையும் ஏற்று செய்து கொடுக்கிறேன் என்று உறுதியளித்து  இருக்கக்கூடிய உதவி மின் பொறியாளருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வோம். 👉மேலும் அல்லாஹ்வின் கிருபையால் நமது ஊரில் உள்ள மின்சாரம் சம்பந்தமான ஒவ்வொரு பிரச்சினைகளையும் ஒவ்வொன்றாக எனக்கு சுட்டிக்காட்டி தாருங்கள் நான் அதனை ஒவ்வொன்றாக சரி செய்து ஆர்.எஸ். ...