Skip to main content

ஆர் எஸ் மங்கலம் பேருராட்சி அலுவலகத்தில் அளிக்கப்பட்ட மராமத்து கோரிக்கை மனு - நாள் : 08 JULY 2020








அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

👉 நமது ஊரில் ரோடு மட்டும் பாலங்கள் சேதமடைந்தது சம்பந்தமாக விளக்கப்படத்துடன் மனு தயாரித்து இன்று செயல் அலுவலரிடம் கொடுக்கப்பட்டது.

👉 அதற்கு அவர்கள் அனைத்து ரோடுகளுக்கும் நாங்கள் எழுதி அனுப்பி இருக்கிறோம். மூன்று மாத காலத்திற்குள் ஒவ்வொன்றாக சரி செய்து தரப்படும் என்று கூறியிருக்கிறார்கள்.

👉 நாங்கள் அதிகம் பாதிப்பு அடைந்துள்ள N.Nபார்க் செல்லும் வழி உள்ள பாலம் மற்றும் பிரிட்டோ ஸ்கூல் அருகில் உள்ள தடுப்பு சுவரை முதலில் சரி செய்து தாருங்கள் என்று கூறினோம்.

👉 அதற்கு அவர்களும் ஒரு வார காலத்திற்குள் முதலில் நாம் குறிப்பிட்ட அந்த இரண்டு இடங்களையும் சரி செய்து கொடுத்துவிட்டு பின்பு ஒவ்வொன்றாக சரி செய்து தருகிறோம் என்று உறுதி அளித்திருக்கிறார்கள். 

👉இன்ஷா அல்லாஹ் நம்முடைய முயற்சிகள் சிரமமின்றி லேசாக நிறைவேறுவதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் உதவி செய்வானாக ஆமீன்....

Comments

Post a Comment

Popular posts from this blog

தகவல் பெறும் உரிமைச் சட்டம் ((Right To Information - RTI)

1.    தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் நோக்கங்கள் 2.    தகவல் உரிமை என்றால் என்ன ? 3.    தகவல் உரிமை எதற்காக ? 4.    என்னென்ன தகவல் கேட்கலாம் ? 5.    தகவல் கொடுக்க வேண்டியவர்கள் ? 6.    என்னென்ன முறையில் தகவல் பெறலாம் 7.    தகவல் கொடுக்க வேண்டிய அதிகாரிகளின் கடமைகள் 8.    தகவலை யாரெல்லாம் கேட்கலாம் ? 9.    யாரிடம் கேட்கலாம் ? 10.   விண்ணப்பம் எழுத யார் உதவ வேண்டும் ? 11.   தமிழிலேயே விண்ணப்பிக்கலாம்! 12.   தபாலில் அனுப்பும் முறை 13.   முகவரிகள் தெரியவில்லையா ? தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் நோக்கங்கள் ·          அரசு அலுவலகங்கள் ஒவ்வொன்றின் செயல்பாட்டிலும் வெளிப்படையான ஒளிவுமறைவற்ற அரசு நிர்வாகத்தைக் கொண்டு வருதல் ·          அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் பணிபுரிபவர்களின் பொறுப்புணர்வை மேம்படுத்தி விரைவாக பணி செய்ய வைத்தல் ·          எந்த ஒ...
 

கொரானா சான்றிதழ் பதிவு செய்யும்போது பாஸ்போர்ட் எண்ணை தவறில்லாமல் பதிவு செய்வது தொடர்பாக மனு கொடுக்கப்பட்டது

 பெறுநர்  வட்டார மருத்துவ அலுவலர் அவர்கள் ராஜசிங்கமங்கலம் பொருள் கொரானா தடுப்பூசி போட்டவர்களுக்கு சான்றிதழில் பாஸ்போர்ட் எண்ணை தவறில்லாமல் பதிவு செய்தல் தொடர்பாக கொரானா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. அந்த சான்றிதழில் அடையாளச் சான்றாக பாஸ்போர்ட் எண்ணை பதிவு செய்யும் பொழுது பாஸ்போர்ட்டில் உள்ள ஆங்கில எழுத்தான முதல் எழுத்தை விட்டு விட்டு மீதமுள்ள எண்களை மட்டும் பதிவு செய்து சர்டிபிகேட் சான்றிதழ் வழங்கப்படுகிறது. வெளிநாடுகளுக்கு செல்லும் பொழுது சான்றிதழில் பாஸ்போர்ட் அடையாள எண் தவறாக இருந்தால் பயணத்தில் சிரமங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தடுப்பூசி போட்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் பொழுது பாஸ்போர்ட்டில் உள்ளவாறு ஆங்கில எழுத்து மற்றும் பாஸ்போர்ட் எண்ணையும் சேர்த்து குறிப்பிட்டு சான்றிதழ் வழங்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறோம்