Skip to main content

மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண நிதி

தமிழக அரசின் ஆணைப்படி, தேசிய அடையாள அட்டை வைத்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. 

இராமநாதபுரம் மாவட்டத்தில் தேசிய அடையாள அட்டை அசல் வைத்துள்ள நபர்களுக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டு  வருகிறது. பணம் வழங்கும் பட்டியலில் பெயர் இருந்தும், ஆனால் அடையாள அட்டை அசல் இல்லாத நபர்கள் இந்த நிவாரண தொகையை பெற முடியாத நிலை இருப்பதால், 

அவர்களுக்கு கீழ்கண்ட நாட்களில் அந்தந்த தாலுகா அலுவலகங்களில், மருத்துவர் மூலம் மருத்துவ சான்றிதழ் வழங்கி அதனடிப்படையில் அன்றைய தினமே நிவாரண தொகை வழங்க மாவட்ட ஆட்சியர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

எனவே தங்கள் பகுதிக்கு உட்பட்ட தாலுகா அலுவலகங்களில், குறிப்பிட்ட தினத்தன்று தகுந்த முன்னேற்பாடுகளை செய்யும்படி இராமநாதபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் அவர்களால் கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

27.07.2020 ( திங்கள்) - இராமேஸ்வரம்,   
28.07.2020 (செவ்வாய்)- கீழக்கரை ,  
29.07.2020 ( புதன்) - கமுதி, 
30.07.2020 ( வியாழன்) - கடலாடி, 
31.07.2020 (வெள்ளி) - ஆர்.எஸ்.மங்களம், 
01.08.2020 (சனி) - திருவாடானை, 
03.08.2020 (திங்கள்) - இராமநாதபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், 
04.08.2020-( செவ்வாய்) - பரமக்குடி, 
05.08.2020 ( புதன்) - முதுகுளத்தூர். 


Comments

Popular posts from this blog

தகவல் பெறும் உரிமைச் சட்டம் ((Right To Information - RTI)

1.    தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் நோக்கங்கள் 2.    தகவல் உரிமை என்றால் என்ன ? 3.    தகவல் உரிமை எதற்காக ? 4.    என்னென்ன தகவல் கேட்கலாம் ? 5.    தகவல் கொடுக்க வேண்டியவர்கள் ? 6.    என்னென்ன முறையில் தகவல் பெறலாம் 7.    தகவல் கொடுக்க வேண்டிய அதிகாரிகளின் கடமைகள் 8.    தகவலை யாரெல்லாம் கேட்கலாம் ? 9.    யாரிடம் கேட்கலாம் ? 10.   விண்ணப்பம் எழுத யார் உதவ வேண்டும் ? 11.   தமிழிலேயே விண்ணப்பிக்கலாம்! 12.   தபாலில் அனுப்பும் முறை 13.   முகவரிகள் தெரியவில்லையா ? தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் நோக்கங்கள் ·          அரசு அலுவலகங்கள் ஒவ்வொன்றின் செயல்பாட்டிலும் வெளிப்படையான ஒளிவுமறைவற்ற அரசு நிர்வாகத்தைக் கொண்டு வருதல் ·          அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் பணிபுரிபவர்களின் பொறுப்புணர்வை மேம்படுத்தி விரைவாக பணி செய்ய வைத்தல் ·          எந்த ஒ...
 

கொரானா சான்றிதழ் பதிவு செய்யும்போது பாஸ்போர்ட் எண்ணை தவறில்லாமல் பதிவு செய்வது தொடர்பாக மனு கொடுக்கப்பட்டது

 பெறுநர்  வட்டார மருத்துவ அலுவலர் அவர்கள் ராஜசிங்கமங்கலம் பொருள் கொரானா தடுப்பூசி போட்டவர்களுக்கு சான்றிதழில் பாஸ்போர்ட் எண்ணை தவறில்லாமல் பதிவு செய்தல் தொடர்பாக கொரானா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. அந்த சான்றிதழில் அடையாளச் சான்றாக பாஸ்போர்ட் எண்ணை பதிவு செய்யும் பொழுது பாஸ்போர்ட்டில் உள்ள ஆங்கில எழுத்தான முதல் எழுத்தை விட்டு விட்டு மீதமுள்ள எண்களை மட்டும் பதிவு செய்து சர்டிபிகேட் சான்றிதழ் வழங்கப்படுகிறது. வெளிநாடுகளுக்கு செல்லும் பொழுது சான்றிதழில் பாஸ்போர்ட் அடையாள எண் தவறாக இருந்தால் பயணத்தில் சிரமங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தடுப்பூசி போட்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் பொழுது பாஸ்போர்ட்டில் உள்ளவாறு ஆங்கில எழுத்து மற்றும் பாஸ்போர்ட் எண்ணையும் சேர்த்து குறிப்பிட்டு சான்றிதழ் வழங்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறோம்