Skip to main content

ஆர்.எஸ் மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரானா சிகிச்சை மையம் அமைக்க கோரிக்கை





பெறுநர்

உயர்திரு வட்டாட்சியர் அவர்கள்

வட்டாட்சியர் அலுவலகம்

ஆர்எஸ் மங்கலம்

 

பொருள்: ஆர்.எஸ் மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரானா சிகிச்சை மையம் அமைத்து தருதல் - சார்பாக

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா மற்றும் சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் கொரானா சிகிச்சைக்காக இராமநாதபுரத்திற்கும், சிவகங்கைக்கும் மற்றும் மதுரைக்கும் பயணம் செய்கின்றனர். இதனால் பண விரையமும் உயிர் இழப்புகளும் ஏற்படுகிறது.

பொதுமக்களின் அலைச்சல் தவிர்க்க மற்றும் அவர்களின் நலம் காக்க ஆர்.எஸ்.மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே கொரானா சிகிச்சை மையம் அமைத்தால் மக்களுக்கு பேருதவியாக அமையும்.

எனவே ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட பொதுமக்களின் நலன் காக்கும் பொருட்டு கொரானா சிகிச்சை மையம் அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

 
ஆா்.எஸ் மங்கலத்தில் கரோனா சிகிச்சை மையம் அமைக்க வலியுறுத்தல் - https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2021/jun/05/insistence-on-setting-up-a-corona-treatment-center-in-the-as-dim-3636310.html


Comments

Popular posts from this blog

தகவல் பெறும் உரிமைச் சட்டம் ((Right To Information - RTI)

1.    தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் நோக்கங்கள் 2.    தகவல் உரிமை என்றால் என்ன ? 3.    தகவல் உரிமை எதற்காக ? 4.    என்னென்ன தகவல் கேட்கலாம் ? 5.    தகவல் கொடுக்க வேண்டியவர்கள் ? 6.    என்னென்ன முறையில் தகவல் பெறலாம் 7.    தகவல் கொடுக்க வேண்டிய அதிகாரிகளின் கடமைகள் 8.    தகவலை யாரெல்லாம் கேட்கலாம் ? 9.    யாரிடம் கேட்கலாம் ? 10.   விண்ணப்பம் எழுத யார் உதவ வேண்டும் ? 11.   தமிழிலேயே விண்ணப்பிக்கலாம்! 12.   தபாலில் அனுப்பும் முறை 13.   முகவரிகள் தெரியவில்லையா ? தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் நோக்கங்கள் ·          அரசு அலுவலகங்கள் ஒவ்வொன்றின் செயல்பாட்டிலும் வெளிப்படையான ஒளிவுமறைவற்ற அரசு நிர்வாகத்தைக் கொண்டு வருதல் ·          அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் பணிபுரிபவர்களின் பொறுப்புணர்வை மேம்படுத்தி விரைவாக பணி செய்ய வைத்தல் ·          எந்த ஒ...
 

கொரானா சான்றிதழ் பதிவு செய்யும்போது பாஸ்போர்ட் எண்ணை தவறில்லாமல் பதிவு செய்வது தொடர்பாக மனு கொடுக்கப்பட்டது

 பெறுநர்  வட்டார மருத்துவ அலுவலர் அவர்கள் ராஜசிங்கமங்கலம் பொருள் கொரானா தடுப்பூசி போட்டவர்களுக்கு சான்றிதழில் பாஸ்போர்ட் எண்ணை தவறில்லாமல் பதிவு செய்தல் தொடர்பாக கொரானா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. அந்த சான்றிதழில் அடையாளச் சான்றாக பாஸ்போர்ட் எண்ணை பதிவு செய்யும் பொழுது பாஸ்போர்ட்டில் உள்ள ஆங்கில எழுத்தான முதல் எழுத்தை விட்டு விட்டு மீதமுள்ள எண்களை மட்டும் பதிவு செய்து சர்டிபிகேட் சான்றிதழ் வழங்கப்படுகிறது. வெளிநாடுகளுக்கு செல்லும் பொழுது சான்றிதழில் பாஸ்போர்ட் அடையாள எண் தவறாக இருந்தால் பயணத்தில் சிரமங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தடுப்பூசி போட்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் பொழுது பாஸ்போர்ட்டில் உள்ளவாறு ஆங்கில எழுத்து மற்றும் பாஸ்போர்ட் எண்ணையும் சேர்த்து குறிப்பிட்டு சான்றிதழ் வழங்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறோம்