விளக்கம்
நாம் வசிக்கும் பகுதிகளில்
மின்சார கம்பங்கள், கம்பிகள், மின் இனைப்பில்லை என்பது தொடர்பான புகார்களை தெரிவிக்க
அப்பகுதியில் இருக்கும் மின்சார வாரிய அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு
பேசுவோம். இனி , மின்சாரம் சம்பந்தமான புகார்களை வாட்ஸ் அப் மூலமும் பதிவு
செய்யலாம்
2017-ம் ஆண்டு
நவம்பர் மாதம் Tamil Nadu Generation and Distribution Corporation (Tangedco) , வாடிக்கையாளர்கள்
தங்களின் புகார்களை தெரிவிக்க வாட்ஸ் அப் எண்களை அறிவித்தது.
” பொதுமக்கள்
தங்கள் குறைகளை அனுப்பும் போது அவர்களின் இருப்பிடத்தையும் குறிப்பிட வேண்டும், இது எங்கள்
அதிகாரிகளுக்கு பிரச்சனையை தீர்க்க எளிதாக இருக்கும் ” என Tangedco-வின்
கண்காணிப்பு பொறியாளர் ஆர்.பத்மநாபன் செய்திகளில் கூறியுள்ளார்.
·
சிதைவடைந்த நிலையில் இருக்கும் மின் கம்பங்கள்,
·
திறந்து இருக்கும் ஜங்சன் பாக்ஸ்கள் ,
·
கீழே தொங்கும் மின்சார கம்பிகள்
உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து புகைப்படங்கள் அல்லது
விவரங்களை வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பி வைக்கலாம்.
ஒவ்வொரு மண்டலங்களுக்கும்
தனித்தனியாக வாட்ஸ் அப் எண்கள் அளிக்கப்பட்டு உள்ளன.
விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை
மாவட்டங்களின் புகார்களுக்கு வாட்ஸ் அப் எண் – 9445855768.
சேலம், ஈரோடு, நாமக்கல்
மாவட்டங்களின் புகார்களுக்கு வாட்ஸ் அப் எண் – 9445851912.
சென்னை
மாவட்டம் முழுவதும் மின்சாரம் சம்பந்தமான புகார்களுக்கு வாட்ஸ் அப் எண் – 9445850829.
கோயம்புத்தூர்
, திருப்பூர் , நீலகிரி மாவட்டங்களின்
புகார்களுக்கு
வாட்ஸ் அப்
எண் – 9442111912.
திருநெல்வேலி
, தூத்துக்குடி , கன்னியாகுமரி மாவட்டங்களின்
புகார்களுக்கு
வாட்ஸ் அப்
எண் – 8903331912.
மதுரை , திண்டுக்கல் , தேனி, ராமநாதபுரம் , சிவகங்கை மாவட்டங்களின் புகார்களுக்கு
வாட்ஸ் அப் எண் – 9443111912.
திருச்சி , தஞ்சாவூர் , பெரம்பலூர், அரியலூர் , புதுக்கோட்டை
, திருவாரூர் , நாகப்பட்டினம் , கரூர்
மாவட்டங்களின் புகார்களுக்கு
வாட்ஸ் அப் எண் – 9486111912.
தமிழக மின்சார வாரியத்தின்
ஒவ்வொரு மண்டலத்திற்கும் புகார்களை அளிக்க வாட்ஸ் எண்களை அளித்து இருப்பது
பொதுமக்களுக்கு பயன்படக்கூடியதாக இருக்கும் என கூறப்படுகிறது. எனினும், பொது
இடங்களில் நீங்கள் காணும் மின்சார பிரச்சனைகள் குறித்து புகார் அளிப்பது மின்சார
வாரியத்தின் பார்வைக்கு செல்லும்.
இதைத் தவிர, உங்கள்
பகுதியில் ஏதேனும் மின்சார பிரச்சனைகள் இருந்து மின் வாரியத்திற்கு புகார்
தெரிவிக்க விரும்பினால் ” 1912 ” என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசலாம். இல்லையேல், உங்கள்
பகுதியில் இருக்கும் மின்வாரியத்தின் அலுவலக எண்ணிற்கும் நேரடியாக தொடர்பு
கொள்ளலாம். இவையும் முடியாத பட்சத்தில், வாட்ஸ் அப்
எண் மூலம் புகார் அளிப்பது பயனளிக்கலாம்.
மாதிரி புகார் கடிதம்
புகார்களை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் அனுப்பலாம்
Date : 28.6.2020
Address
J.Mohamed Ibrahim
S/o Mohamed jabarullahkhan
14/27 Aligar salai
R.s.Mangalam
Ramanathapuram(DIST)
PIN-623525
PH-944XXXXX76
Subject - complaining of
a frequent power cut.
Dear sir,
This is a matter of great
concern that our locality is severely getting affected by frequent power cuts
in the recent month. Because of all this, very tragic effects can be noticed on
the health, mental stability and study habits in our children. Every
family member in the family is facing problem. Aged are unable to get the rest
and relaxation they require. It is difficult to bath without geyser in such a
cold weather. Kitchen work and other chores of our mothers are getting
disrupted as well. The conditions are undescribable. I thank you in
anticipation and expect the condition to improve soon in near future. So i
would like you to write an article in one of your esteemed columns regarding
this topic.Through the columns of your esteemed daily, i want to draw the
attention of the respective authorities to the frequent breakdown of
electricity in my area.
Thankyou.
Useful information
ReplyDelete