Skip to main content

கேரளாவில் சாதிக்கும் முஸ்லிம் இளம் ஐஏஎஸ் பட்டாளம்

கேரள முஸ்லிம் சமூகத்தின் தெளிவான அரசியல் பயணித்தலால் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இளம் முஸ்லிம் பட்டதாரிகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்து வருகிறது..

 

அரசின் உயர் பதவிகளான மாவட்ட ஆட்சியர் மற்றும் பல்வேறு துறைகளில் செயலாளர் பதவியை திறம்பட நிர்வகித்து ஆட்சியாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் திருப்தியான சேவை செய்து வருகின்றனர்...

ஆலப்புழா மாவட்ட ஆட்சியராக டாக்டர் ஆதிலா அப்துல்லாஹ், 

கொல்லம் மாவட்ட ஆட்சியராக பி.அப்துல் நாசிர்,

மலப்புறம் மாவட்ட ஆட்சியராக ஜாஃபர் மாலிக் ஆகியோர்

குறைந்த வயதில் ஐஏஎஸ் தேர்ச்சி பெற்று கலெக்டர் பதவியில் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்..

கேரள அரசின் கனவுத் திட்டமான கொச்சி மெட்ரோ ரெயில் திட்டத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த

முகமது ஹனீஸ் ஐஏஎஸ் தற்போது கேரள அரசு தொழில்துறை செயலாளராக பதவி வகித்து வருகிறார்..

 

மேலும்

கேரள கல்வித்துறை செயலாளராக ஏ.ஷாஜகான் ஐஏஎஸ் , 

ஜி.எஸ். டி இயக்குனராக ஒய். ஷபீறுல்லாஹ் ஐஏஎஸ் ,

சுசித்ர மிஷன் திட்ட இயக்குனராக மீர் முகமது ஐஏஎஸ்

ஆகியோர் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்..

 

கேரள அரசின் பல்வேறு துறைகளில் கூடுதல் செயலாளர் பொறுப்பில்

எஸ். ஷானவாஸ் ஐஏஎஸ் , அஷ்ரப் அலி ஐஏஎஸ் ஆகியோரும் பணியாற்றி வருகின்றனர்...

@ Colachel Azheem.


Comments

Popular posts from this blog

தகவல் பெறும் உரிமைச் சட்டம் ((Right To Information - RTI)

1.    தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் நோக்கங்கள் 2.    தகவல் உரிமை என்றால் என்ன ? 3.    தகவல் உரிமை எதற்காக ? 4.    என்னென்ன தகவல் கேட்கலாம் ? 5.    தகவல் கொடுக்க வேண்டியவர்கள் ? 6.    என்னென்ன முறையில் தகவல் பெறலாம் 7.    தகவல் கொடுக்க வேண்டிய அதிகாரிகளின் கடமைகள் 8.    தகவலை யாரெல்லாம் கேட்கலாம் ? 9.    யாரிடம் கேட்கலாம் ? 10.   விண்ணப்பம் எழுத யார் உதவ வேண்டும் ? 11.   தமிழிலேயே விண்ணப்பிக்கலாம்! 12.   தபாலில் அனுப்பும் முறை 13.   முகவரிகள் தெரியவில்லையா ? தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் நோக்கங்கள் ·          அரசு அலுவலகங்கள் ஒவ்வொன்றின் செயல்பாட்டிலும் வெளிப்படையான ஒளிவுமறைவற்ற அரசு நிர்வாகத்தைக் கொண்டு வருதல் ·          அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் பணிபுரிபவர்களின் பொறுப்புணர்வை மேம்படுத்தி விரைவாக பணி செய்ய வைத்தல் ·          எந்த ஒ...
 

கொரானா சான்றிதழ் பதிவு செய்யும்போது பாஸ்போர்ட் எண்ணை தவறில்லாமல் பதிவு செய்வது தொடர்பாக மனு கொடுக்கப்பட்டது

 பெறுநர்  வட்டார மருத்துவ அலுவலர் அவர்கள் ராஜசிங்கமங்கலம் பொருள் கொரானா தடுப்பூசி போட்டவர்களுக்கு சான்றிதழில் பாஸ்போர்ட் எண்ணை தவறில்லாமல் பதிவு செய்தல் தொடர்பாக கொரானா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. அந்த சான்றிதழில் அடையாளச் சான்றாக பாஸ்போர்ட் எண்ணை பதிவு செய்யும் பொழுது பாஸ்போர்ட்டில் உள்ள ஆங்கில எழுத்தான முதல் எழுத்தை விட்டு விட்டு மீதமுள்ள எண்களை மட்டும் பதிவு செய்து சர்டிபிகேட் சான்றிதழ் வழங்கப்படுகிறது. வெளிநாடுகளுக்கு செல்லும் பொழுது சான்றிதழில் பாஸ்போர்ட் அடையாள எண் தவறாக இருந்தால் பயணத்தில் சிரமங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தடுப்பூசி போட்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் பொழுது பாஸ்போர்ட்டில் உள்ளவாறு ஆங்கில எழுத்து மற்றும் பாஸ்போர்ட் எண்ணையும் சேர்த்து குறிப்பிட்டு சான்றிதழ் வழங்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறோம்