Skip to main content

நிர்வாகம்

 

 

அதிகாரம்என்பதை ஆள்வதுஎன்ற பொருளில் மட்டுமே மக்கள் எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள்.

 

உண்மையில் அதிகாரம் என்பது சேவை செய்ய கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பு என்பதுதான் உண்மை. மக்களுக்காக சேவை செய்ய இறைவன் தேர்ந் தெடுத்துள்ளவரே தலைவராவார். அவர் தலைவர்என்பதையும் தாண்டி பொறுப்பாளர்என்பதே சரியானதாகும்.

 

இவர்கள் மட்டுமல்ல, யார் யாரெல்லாம் பொறுப்பு கொடுக்கபட்டுள்ளார்களோ அவரவர்கள் தங்கள் கடமையை பொறுப்பாக செய்ய வேண்டும்.

 

இறையச்சம் கொண்ட ஒருவர், தனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பை அதிகாரத்திற்காக பயன் படுத்த மாட்டார். மாறாக, சேவையாகவே அந்த வாய்ப்பை பயன்படுத்துவார்.

நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள்.

 

அதிகாரம் என்பது பொறுப்பை நிறைவேற்ற கொடுக்கப்பட்டுள்ள அமானிதமாகும். அதை எக்காரணம் கொண்டும் தவறாக பயன்படுத்தக் கூடாது.


Comments

Post a Comment

Popular posts from this blog

தகவல் பெறும் உரிமைச் சட்டம் ((Right To Information - RTI)

1.    தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் நோக்கங்கள் 2.    தகவல் உரிமை என்றால் என்ன ? 3.    தகவல் உரிமை எதற்காக ? 4.    என்னென்ன தகவல் கேட்கலாம் ? 5.    தகவல் கொடுக்க வேண்டியவர்கள் ? 6.    என்னென்ன முறையில் தகவல் பெறலாம் 7.    தகவல் கொடுக்க வேண்டிய அதிகாரிகளின் கடமைகள் 8.    தகவலை யாரெல்லாம் கேட்கலாம் ? 9.    யாரிடம் கேட்கலாம் ? 10.   விண்ணப்பம் எழுத யார் உதவ வேண்டும் ? 11.   தமிழிலேயே விண்ணப்பிக்கலாம்! 12.   தபாலில் அனுப்பும் முறை 13.   முகவரிகள் தெரியவில்லையா ? தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் நோக்கங்கள் ·          அரசு அலுவலகங்கள் ஒவ்வொன்றின் செயல்பாட்டிலும் வெளிப்படையான ஒளிவுமறைவற்ற அரசு நிர்வாகத்தைக் கொண்டு வருதல் ·          அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் பணிபுரிபவர்களின் பொறுப்புணர்வை மேம்படுத்தி விரைவாக பணி செய்ய வைத்தல் ·          எந்த ஒ...
 

கொரானா சான்றிதழ் பதிவு செய்யும்போது பாஸ்போர்ட் எண்ணை தவறில்லாமல் பதிவு செய்வது தொடர்பாக மனு கொடுக்கப்பட்டது

 பெறுநர்  வட்டார மருத்துவ அலுவலர் அவர்கள் ராஜசிங்கமங்கலம் பொருள் கொரானா தடுப்பூசி போட்டவர்களுக்கு சான்றிதழில் பாஸ்போர்ட் எண்ணை தவறில்லாமல் பதிவு செய்தல் தொடர்பாக கொரானா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. அந்த சான்றிதழில் அடையாளச் சான்றாக பாஸ்போர்ட் எண்ணை பதிவு செய்யும் பொழுது பாஸ்போர்ட்டில் உள்ள ஆங்கில எழுத்தான முதல் எழுத்தை விட்டு விட்டு மீதமுள்ள எண்களை மட்டும் பதிவு செய்து சர்டிபிகேட் சான்றிதழ் வழங்கப்படுகிறது. வெளிநாடுகளுக்கு செல்லும் பொழுது சான்றிதழில் பாஸ்போர்ட் அடையாள எண் தவறாக இருந்தால் பயணத்தில் சிரமங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தடுப்பூசி போட்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் பொழுது பாஸ்போர்ட்டில் உள்ளவாறு ஆங்கில எழுத்து மற்றும் பாஸ்போர்ட் எண்ணையும் சேர்த்து குறிப்பிட்டு சான்றிதழ் வழங்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறோம்