‘அதிகாரம்’ என்பதை ‘ஆள்வது’ என்ற பொருளில்
மட்டுமே மக்கள் எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள்.
உண்மையில் அதிகாரம் என்பது ‘சேவை செய்ய கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பு’ என்பதுதான்
உண்மை. மக்களுக்காக சேவை செய்ய இறைவன் தேர்ந் தெடுத்துள்ளவரே
தலைவராவார். அவர் ‘தலைவர்’ என்பதையும் தாண்டி ‘பொறுப்பாளர்’ என்பதே சரியானதாகும்.
இவர்கள் மட்டுமல்ல, யார் யாரெல்லாம்
பொறுப்பு கொடுக்கபட்டுள்ளார்களோ அவரவர்கள் தங்கள் கடமையை பொறுப்பாக செய்ய வேண்டும்.
இறையச்சம் கொண்ட ஒருவர், தனக்கு வழங்கப்பட்டுள்ள
பொறுப்பை அதிகாரத்திற்காக பயன் படுத்த மாட்டார். மாறாக, சேவையாகவே அந்த வாய்ப்பை பயன்படுத்துவார்.
‘நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும்
தத்தமது பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள்.
அதிகாரம் என்பது பொறுப்பை நிறைவேற்ற கொடுக்கப்பட்டுள்ள அமானிதமாகும். அதை எக்காரணம் கொண்டும் தவறாக பயன்படுத்தக் கூடாது.
This comment has been removed by the author.
ReplyDelete