தமிழகத்தில் முதன்முறையாக ஜமாபந்தி மனுக்கள் இணையதளத்தின் மூலம் அரசு இசேவை மையங்கள் வழியாக மனுக்கள் பதிவேற்றம் செய்யலாம்.
மனுக்கள் பதிவேற்றம் செய்யும் வழிமுறைகள் காணொளியில்..
https://youtu.be/UZBp1YMwxmI
பொது இ சேவை மையத்தில் ஜமாபந்தி மனு அளிக்கலாம்..
ஜமாபந்தியில் எதற்க்காக மனு அளிக்கலாம்? பட்டா, சிட்டா, அடங்கல் குறித்தான விவரங்கள் கேட்டு மனுக்கள் தரலாம். குடிநீர் வசதி, சாலை வசதி, மயான வசதி, கழிவு நீர் சாக்கடை வசதி முதலிய தேவைகள் குறித்தும் வருவாய்த்துறை அலுவலர்களிடம் முறையிடலாம். இலவச மனை பட்டா வேண்டி விண்ணப்பிக்கலாம். வீட்டு மனை உடையவர்கள் வீடு கட்ட அரசு கடன் மற்றும் மானியம் கோரி விண்ணப்பிக்கலாம். குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் ஆதரவற்ற விதவைகள் மற்றும் முதியோர் ஒய்வூதியம், என்று உங்கள் கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம் இந்த வருவாய் தீர்வாயத்தில் பொதுமக்களின் நியாயமான கோரிக்கை மனுக்கள் உடனடியாக வருவாய்த்துறையினரால் நிறைவேற்றப்படும். இந்த ஆண்டு ஜமாபந்தி ஆன்லைன் மூலம் ஏன்? கொரோனாவால் ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் மக்கள் கூட்டமாக கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.அவர்களிடம் நேரிடையாக மனுக்கள் பெற இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தங்கள் கோரிக்கை சம்பந்தமான மனுக்களை ஜூன் 29 ம்தேதி முதல் ஜூலை 15 ம்தேதி வரை பொது சேவை மையம் மூலம் மனு அளிக்கலாம்
Good info
ReplyDelete